குற்றால அருவியை போல் தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீர்: குடும்பத்தினருடன் உற்சாக குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்


குற்றால அருவியை போல்  தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீர்:  குடும்பத்தினருடன் உற்சாக குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்
x

குற்றால அருவியை போல திண்டுக்கல் தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் உற்சாக குளியல் போட்டு மகிழ்ந்தனர்

திண்டுக்கல்


கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக, ஆத்தூர் காமராஜர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்ந்து வருகிறது. இதையடுத்து அணையை சுற்றியுள்ள தடுப்பணைகள், குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் திண்டுக்கல்லை அடுத்த அனுமந்தராயன்கோட்டை அருகே உள்ள தடுப்பணை தற்போது நிரம்பி வழிகிறது. மேலும் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் தடுப்பணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் குற்றால அருவியை போல் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.


இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் நேற்று காலையில் இருந்தே தடுப்பணைக்கு வந்து உற்சாக குளியல் போட தொடங்கினர். சிலர் தங்கள் குடும்பத்தினருடன் தண்ணீர் கொட்டும் இடத்திற்கு சென்று அங்குள்ள பாறைகள் மீது அமர்ந்து ஆனந்த குளியல் போட்டனர். பின்னர் தடுப்பணை பகுதியிலேயே சமையல் செய்து சாப்பிட்டு பொழுதை கழித்தனர். மேலும் சுற்றுலா பயணிகளில் பலர் உற்சாக மிகுதியில் தங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் தண்ணீர் கொட்டும் இடத்தில் நின்று தங்களின் செல்போன்களில் 'செல்பி' எடுத்துக்கொண்டனர்.



Next Story