மனைவி கழுத்தை இறுக்கி கொன்ற 4-வது கணவருக்கு ஆயுள் தண்டனை; தென்காசி கோர்ட்டு தீர்ப்பு

மனைவி கழுத்தை இறுக்கி கொன்ற 4-வது கணவருக்கு ஆயுள் தண்டனை; தென்காசி கோர்ட்டு தீர்ப்பு
x

மனைவி கழுத்தை இறுக்கி கொலை செய்த வழக்கில் அவரது 4-வது கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

தென்காசி

மனைவி கழுத்தை இறுக்கி கொலை செய்த வழக்கில் அவரது 4-வது கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

4-வது திருமணம்

தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த தேன் பொத்தை என்ற பகுதியை சேர்ந்தவர் வெள்ளத்தாய் (வயது 40). இவருக்கு மூன்று முறை திருமணம் நடைபெற்று இவரது வாழ்க்கை சரி இல்லாமல் இருந்தது.

இதனால் இவர் தனது தாய் சண்முகத்தாயின் வீட்டில் வசித்து வந்தார். அப்போது சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு சிவகிரியை சேர்ந்த முருகன் (54) என்பவரை 4-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார்.

ஆயுள் தண்டனை

இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த முருகன் கடந்த 2-12-2016 அன்று மின் வயரால் வெள்ளத்தாயின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். இதுகுறித்து செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தென்காசி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி அனுராதா, முருகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் கடுங்காவல் தண்டனையும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் வேலுசாமி ஆஜர் ஆனார்.

Next Story