தாய்-தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை


தாய்-தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை

திருவாரூர்

ஓட்டல் மாஸ்டரை அடித்து கொன்ற வழக்கில் தாய்-தந்தை,, மகன் ஆகிய 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவாரூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

ஓட்டல் மாஸ்டர்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட எழிலூர் மேல தெருவை சேர்ந்தவர் அருள்தாஸ்(வயது 38). இவர் நாமக்கல் மாவட்டம் திருச்ெசங்கோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் மாஸ்டராக வேலை செய்து வந்தார்.

கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 18-ந்தேதி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு அருள்தாஸ் வந்திருந்தார். அப்போது அவரது மனைவி பாலசுந்தரி, குழந்தைகளால் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் தகராறு ஏற்படுகிறது என்று ெதரிவித்துள்ளார்.

தகராறு

இதையடுத்து அருள்தாஸ், தனது குழந்தைகளை அழைத்து கடுமையாக திட்டி பக்கத்து வீட்டிற்கு செல்லக்கூடாது என்று எச்சரித்துள்ளார்.

அதைக்கேட்ட பக்கத்து வீட்டுக்காரரான செல்லதுரை(60) என்பவரின் மனைவி சந்திரா(44) ஏன் எங்களை ஜாடையாக திட்டி பேசுகிறாய் என கூறி தகராறில் ஈடுபட்டு பாலசுந்தரியை கீழே தள்ளி விட்டுள்ளார். அதைப்பார்த்த அருள்தாஸ், தனது மனைவியை காப்பாற்ற முயன்றார்.

அடித்துக்கொலை

அப்போது செல்லதுரை மகன் சுதாகர்(36) அருகில் இருந்த மூங்கில் கட்டையால் அருள்தாஸ் தலையில் தாக்கினார். செல்லத்துரையும் கருக்கு மட்டையால்(பனை மட்டை) அருள்தாஸ் தலையில் தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே அருள்தாஸ் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லதுரை, சந்திரா மற்றும் சுதாகர் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருவாரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று வழக்கு விசாரணை முடிந்து மாவட்ட அமர்வு நீதிபதி சாந்தி தீர்ப்பு வழங்கினார்.

தாய், தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை

அவர் தனது தீர்ப்பில், அருள்தாசை கொலை செய்த வழக்கில் செல்லதுரை, அவரது மனைவி சந்திரா மற்றும் மகன் சுதாகர் ஆகிய 3 பேருக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபாரதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாத சிறைதண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.

இதையடுத்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மணிவண்ணன் ஆஜராகி வாதாடினார்


Related Tags :
Next Story