சட்ட சேவை விழிப்புணர்வு கண்காட்சி


சட்ட சேவை விழிப்புணர்வு கண்காட்சி
x
தினத்தந்தி 9 Nov 2022 6:45 PM GMT (Updated: 9 Nov 2022 6:47 PM GMT)

சட்ட சேவை விழிப்புணர்வு கண்காட்சி

ராமநாதபுரம்

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு சட்டப்பணிகள் வழிகாட்டுதல் படியும் ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பாக சட்ட சேவைகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி மக்களிடம் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி ராமநாதபுரம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் சட்டசேவைகள் விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியை மாவட்ட நீதிபதியும் சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவருமான விஐயா தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கூடுதல் மாவட்ட நீதிபதி சீனிவாசன், நீதிபதிகள் பரணிதரன், முனியசாமி, கவிதா, பிரபாகரன், வெர்ஜின் வெஸ்டா, சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் கதிரவன், வக்கீல் சங்க தலைவர் சேக்இப்ராகிம், செயலாளர் கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கண்காட்சியில் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் கடந்த காலங்களில் மக்களுக்கு வழங்கிய சட்ட சேவைகள் குறித்தும், கொத்தடிமைகள் மீட்பு, குடும்பத்தை விட்டு தவித்தவர்களை ஒன்று சேர்த்தது போன்ற பணிகள் தொடர்பான புகைப்பட கண்காட்சியும், சட்ட சேவைகள் குறித்த விழிப்புணர்வு புத்தகங்களும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த சட்ட சேவை விழிப்புணர்வு புத்தகங்கள் மற்றும் துண்டு பிரசுரங்களை நீதிபதி விஜயா பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


Next Story