போலீஸ் நிலையம் முன் வக்கீல்கள் முற்றுகை போராட்டம்


போலீஸ் நிலையம் முன் வக்கீல்கள் முற்றுகை போராட்டம்
x

போலீஸ் நிலையம் முன் வக்கீல்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி

மணப்பாறை:

மணப்பாறை போலீஸ் நிலையத்திற்கு ஒரு புகார் சம்பந்தமாக வக்கீல் ஒருவர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை சந்தித்துள்ளார். விசாரணையின்போது வாக்குவாதம் ஏற்பட்டு சப்-இன்ஸ்பெக்டர், வக்கீலை தாக்கியதாகவும் அவரது செல்போனை பறித்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில், நேற்று மணப்பாறை வழக்கறிஞர் சங்கத்தினர், சப்-இன்ஸ்பெக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மணப்பாறை போலீஸ் நிலையம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வக்கீல்களுடன் போலீஸ் துணை சூப்பிரண்டு ராமநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். வக்கீலின் செல்போனை போலீசார் ஒப்படைத்தனர். மேலும், போலீஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, சப்-இன்ஸ்பெக்டர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துவிட்டு, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story