நெல்லை கோர்ட்டில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


நெல்லை கோர்ட்டில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
x

நெல்லை கோர்ட்டில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

நெல்லை கோர்ட்டு வளாகம் முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் விசாரணை நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய முப்பெரும் சட்டங்களை மத்திய அரசு கொடூர அடக்கு முறைச் சட்டங்களாக திருத்துவதை கண்டித்தும், நீதிமுறையை காலி செய்ய வழி வகுக்கும் சமஸ்கிருத பெயர்களில் மத்திய உள்துறை மந்திரி தாக்கல் செய்த முப்பெரும் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அனைத்திந்திய நீதிக்கான வக்கீல்கள் சங்கம், சமூக நீதிக்கான வக்கீல்கள், அகில இந்திய வக்கீல்கள் சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய நீதிக்கான வக்கீல்கள் சங்க அகில இந்திய துணைத் தலைவர் ஜி.ரமேஷ் தலைமை தாங்கினார். நெல்லை வக்கீல் சங்க முன்னாள் செயலாளர் ப.செந்தில்குமார், அகில இந்திய வக்கீல் சங்க மாநில குழு உறுப்பினர் கு.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் நிர்வாகிகள் ராஜா முகமது, காமினி தேவன், ராமநாதன், முபாரக் அலி, முருகன் மற்றும் மணிகண்டன், சுதர்சன், சுப்பிரமணியன், நிஜாம், வினோத், ஆரிப், பரமசிவன், ரிஸ்வானா, மாலதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story