இலவச பித்தளை தேய்ப்பு பெட்டி பெற சலவை தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்


இலவச பித்தளை தேய்ப்பு பெட்டி பெற சலவை தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்
x

இலவச பித்தளை தேய்ப்பு பெட்டி பெற சலவை தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

தமிழ்நாட்டில் வாழும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சார்ந்த ஏழ்மை நிலையிலுள்ள மக்களுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒரு திட்டமாக ஏழ்மை நிலையிலுள்ள சலவை தொழிலாளர்களுக்கு இலவச பித்தளை தேய்ப்பு பெட்டி வழங்கப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். மேற்காணும் தகுதியுடையவர்கள் சலவை தொழில் செய்வதற்கான கிராம நிர்வாக அலுவலரின் சான்று, சாதி சான்று, வருமான சான்று, ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் இலவச பித்தளை தேய்ப்பு பெட்டி பெற விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அறை எண் 16-ல் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், என்று கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.


Next Story