மடிக்கணினி - செல்போன்கள் திருடிய மர்ம நபருக்கு வலைவீச்சு


மடிக்கணினி - செல்போன்கள் திருடிய மர்ம நபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 20 Feb 2023 12:15 AM IST (Updated: 20 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினத்தில் மடிக்கணினி - செல்போன்கள் திருடிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் கல்லூரி சாலையை சேர்ந்த ராஜலிங்கம் மகன் பிரதீப் ராஜ் (வயது 21). இவர் குலசேகரன்பட்டினம் அருகே உள்ள கல்லாமணி அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணியில் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். குலசேகரன்பட்டினம் பைபாஸ் சாலையில் அவரது நண்பர்களுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று பிரதீப் ராஜ் வீட்டின் கதவை பூட்டாமல் தூங்கினார்.

காலையில் எழுந்து பார்த்தபோது அவரது அறையில் இருந்த மடிக்கணினி, செல்போன் மற்றும் அவரது நண்பர்களான ரவி, பாரத் ஆகியோரின் செல்போன்களையும் காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் அதனை திருடிச் சென்று விட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ரகுராஜன் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story