ரூ.1 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு


ரூ.1 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு
x

ரூ.1 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை ஆஞ்சநேயர் கோவிலுக்கு சொந்தமான ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பிலான நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

கோவில் நிலம்

பட்டுக்கோட்டை நகர் சாமுமுதலி தெரு மாரியம்மன் கோவிலின் குழுக் கோவிலான பட்டுக்கோட்டை நகர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சொந்தமாக புனல் வாசல்(ராமகிருஷ்ணாபுரம்) கிராமத்தில் உள்ள 7 ஏக்கர் 58 சென்ட் புன்செய் நிலமும், 2 ஏக்கர் 12 சென்ட் காலிமனை பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது.

இது குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனைப்படி தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நாகையா, இந்து சமய அறநிலையத்துறை தனி தாசில்தார் சங்கர், நில அளவையர் ரெங்கராஜன், பட்டுக்கோட்டை சரக ஆய்வாளர் ஜெயசித்ரா ஆகியோர் முன்னிலையில் கோவில் செயல் அலுவலர் ரவிச்சந்திரன் ஆக்கிரமிப்புதாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ரூ.1 கோடியே 10 லட்சம்

இந்த பேச்சுவார்த்தையின் மூலம் ஆக்கிரமிப்புதாரர்களின் சம்மதத்தின் பேரில் கோவில் நிலம் அறநிலையத்துறை வசம் கொண்டுவரப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது பேராவூரணி சரக ஆய்வாளர் அமுதா, ஆத்தாளூர் வீரமாகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் தனலட்சுமி மற்றும் கோவில் பணியாளர்கள் இருந்தனர்.

ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு சுமார் ரூ.1 கோடியே 10 லட்சம் என கூறப்படுகிறது. கையகப்படுத்தப்பட்ட இடத்தில் 'இந்த இடம் கோவிலுக்கு சொந்தமானது' என்ற அறிவிப்பு பதாகையும் கோவில் நிர்வாகத்தால் வைக்கப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story