சிறுமி கர்ப்பம் தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை


சிறுமி கர்ப்பம் தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை
x
தினத்தந்தி 14 Jun 2023 7:45 PM GMT (Updated: 15 Jun 2023 11:44 AM GMT)

சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை

தஞ்சாவூர்

சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

கரும்பு வெட்டும் பணி

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தெரசாபுரம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் தெய்வசிகாமணி(வயது 52). கரும்பு வெட்டும் தொழிலாளி.யான இவர் கடந்த 2019-ம் ஆண்டு தஞ்சையை அடுத்த தங்கப்பன் உடையான்பட்டிக்கு கரும்பு வெட்டுவதற்காக வந்து இருந்தார்.

அதேபோல் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் தனது 13 வயது மகளை அழைத்துக் கொண்டு கரும்பு வெட்டுவதற்காக வந்து இருந்தார். இவர்கள் கரும்பு வெட்டும் பகுதியில் போடப்பட்டிருந்த கூரை செட்டில் வசித்து வந்தனர்.

சிறுமி கர்ப்பம்

இந்த குழுவினர் திருவள்ளுர், அரியலூர் போன்ற பகுதிகளுக்கும் கரும்பு வெட்டுவதற்காக சென்றனர். இந்த நிலையில் அரியலூரில் கரும்பு வெட்டுவதற்காக சென்றபோது திடீரென 13 வயது சிறுமிக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. உடனே அரியலூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது, டாக்டர்கள் அந்த சிறுமியை பரிசோதித்தபோது அவர் கர்ப்பமாக இருந்ததும், பிரசவ வலி ஏற்பட்டதும் தெரியவந்தது.

குழந்தை பிறந்தது

இதையடுத்து அந்த சிறுமியை அதே ஆஸ்பத்திரியில் அனுமதித்தபோது அந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் அந்த குழந்தையுடன் சிறுமி தனது சொந்த ஊரான புதுச்சேரிக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் அந்த ஆஸ்பத்திரியில் பணிபுரிந்த நர்சு, ஆதார் அட்டையை பார்த்தபோது பிரசவமான சிறுமிக்கு 13 வயது தான் ஆனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இதுகுறித்து சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசில் புகார்

இதையடுத்து அந்த அமைப்பினர் புதுச்சேரிக்கு விரைந்து சென்று குழந்தை பெற்ற சிறுமியை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது தங்கப்பன் உடையான்பட்டிக்கு தனது தாயாருடன் வந்தபோது, கரும்புவெட்டும் தொழிலாளி தெய்வசிகாமணி, தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து சிறுமியை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து புதுச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

கைது

அந்த புகார் தஞ்சையை அடுத்த வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

அதில் சிறுமி கர்ப்பத்துக்கு தெய்வசிகாமணி தான் காரணம் என்பது தெரியவந்தது. டி.என்.ஏ. சோதனையும் இதை உறுதிப்படுத்தியது. இதையடுத்து சிறுமி கர்ப்பமானதற்கு காரணமான தெய்வசிகாமணியை போலீசார் கைது செய்தனர்.

25 ஆண்டுகள் சிறை

பின்னர் அவரை தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி சுந்தர்ராஜன் விசாரித்து தெய்வசிகாமணிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

மேலும் அவர், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரண தொகையாக ரூ.3 லட்சம் வழங்குமாறு அரசுக்கு பரிந்துரை செய்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார்.


Related Tags :
Next Story