திருநங்கைகள் கட்டிய கோவிலில் கும்பாபிஷேகம்


திருநங்கைகள் கட்டிய கோவிலில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 23 July 2023 6:45 PM GMT (Updated: 23 July 2023 6:46 PM GMT)

திருநங்கைகள் கட்டிய கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

ராமநாதபுரம்

பரமக்குடி,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வேந்தோணி கிராமத்தில் திருநங்கை நகர் காலனி உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் திருநங்கைகள் அனைவரும் ஒன்றிணைந்து புதிதாக கோவில் கட்ட முடிவு செய்தனர். அதன்படி அப்பகுதியில் முத்துமாரியம்மன் கோவிலை கட்டினர். இந்த கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இந்த விழா கடந்த 22-ந் தேதி அனுக்ஞை பூஜை, விக்னேஸ்வர பூஜை, மகாகணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

தொடர்ந்து வாஸ்து சாந்தி, யந்திர ஸ்தாபனம், கிரக பிரதிஷ்டை நடைபெற்றது. பின்பு யாகசாலை பூஜை நடந்தது. நேற்று சிவாச்சாரியார்கள் யாகசாலையில் இருந்து கும்பகலசங்களுடன் கோவிலை வலம் வந்து கோவிலின் கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திருநங்கைகள், அரசியல் பிரமுகர்கள், சமுதாய பெரியோர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story