மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாராட்டு


மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாராட்டு
x

மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாராட்டு

நாகப்பட்டினம்

வேதாரண்யம் பொன்விழா நகரில் வசிப்பவர் ஓய்வு பெற்ற தொலை தொடர்புத் துறை இளநிலை பொறியாளர் ராமச்சந்திரன். இவரது இளைய மகள் பிரியதர்ஷினி. மாற்றுத்திறனாளி. இவர் நாகப்பட்டினம் இ.ஜி.எஸ். பிள்ளை என்ஜினீயரிங் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங்கில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். தேர்ச்சி பெற்ற மாணவி பிரியதர்ஷினிக்கு வேதாரண்யம் வர்த்தக சங்க தலைவர் தென்னரசு, மல்லிகா தென்னரசு ஆகியோர் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டினர். பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரமுகர்கள், வர்த்தகர்கள், அதிகாரிகள், ஆசிரியர்கள் மாணவியை பாராட்டினர்.


Next Story