கோத்தகிரி எம்.எஸ்.டி. அணி சாம்பியன்


கோத்தகிரி எம்.எஸ்.டி. அணி சாம்பியன்
x
தினத்தந்தி 11 Sep 2023 9:30 PM GMT (Updated: 11 Sep 2023 9:30 PM GMT)

தாலுகா அளவிலான கிரிக்கெட் போட்டியில் கோத்தகிரி எம்.எஸ்.டி. அணி சாம்பியன் பட்டம் வென்றது.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி காந்தி மைதானத்தில் கைத்தளா கிரிக்கெட் கிளப் சார்பில், தாலுகா அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட 50 அணிகள் பங்கேற்று விளையாடின. நாக் அவுட் முறையில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற கோத்தகிரி எம்.எஸ்.டி. லெவன்ஸ் அணியும், குண்டாடா அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்தநிலையில் நேற்று இறுதி போட்டி நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கோத்தகிரி எம்.எஸ்.டி. லெவன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை குவித்தது. இந்த அணி வீரர்கள் பிரகாஷ் 50 ரன்கள், மணிகண்டன் 28 ரன்கள் எடுத்தனர். குண்டாடா அணியின் பந்து வீச்சாளர் யஷ்வந்த் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து களம் இறங்கிய குண்டாடா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இந்த அணி வீரர்கள் ராகுல் 43 ரன்கள், யஷ்வந்த் 34 ரன்கள் எடுத்தனர். கோத்தகிரி எம்.எஸ்.டி. அணியின் பந்து வீச்சாளர்கள் பிரகாஷ், பெள்ளி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கோத்தகிரி எம்.எஸ்.டி. லெவன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், முதலிடம், 2-வது இடம் பிடித்த அணிகளுக்கு மாவட்ட விளையாட்டு அணி அமைப்பாளர் ஆல்வின் பரிசு கோப்பைகளை வழங்கினார்.


Next Story