கொப்பரை தேங்காய் ஏலம்


கொப்பரை தேங்காய் ஏலம்
x
தினத்தந்தி 1 Aug 2023 7:30 PM GMT (Updated: 1 Aug 2023 7:31 PM GMT)

கொப்பரை தேங்காய் ஏலம்

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள 66 விவசாயிகள் 493 மூட்டை கொப்பரை தேங்காயை பொது ஏலத்தில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தனர். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கொப்பரை தேங்காயை தரம் பிரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. தாராபுரம், காங்கேயம், கேரளா மாநிலத்தை சேர்ந்த 7 வியாபாரிகள் பொது ஏலத்தில் கலந்து கொண்டனர்.

இதில் 205 மூட்டை முதல் ரக கொப்பரை கிலோ ஒன்றிற்கு 76.40 ரூபாய் முதல் 83.66 ரூபாய் வரை ஏலம் விடப்பட்டது. 288 மூட்டை 2-ம் ரக கொப்பரை கிலோ ஒன்றிற்கு 48.13 ரூபாய் முதல் 72.92 ரூபாய் வரை ஏலம் விடப்பட்டது. கடந்த வாரத்தை விட 246 மூட்டைகள் வரத்து அதிகரித்துள்ளது என்று ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செந்தில் முருகன் தெரிவித்தார்.


Related Tags :
Next Story