கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
x

கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு

கடத்தூர்

கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொடிவேரி அணை

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையின் பாறைகளில் இருந்து அருவிபோல் தண்ணீர் கொட்டுவதால் அதில் குளித்து மகிழ நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை அணையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஏராளமானோர் குடும்பத்துடன் அணைக்கு வருகிறார்கள். ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் ஆனந்தமாய் குளித்துவிட்டு, அங்கு விற்கப்படும் வறுத்த மீன்களை வாங்கி சுைவக்கிறார்கள்.

குளிக்க தடை

இந்தநிலையில் கொடிவேரி அணையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இதனால் பவானி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன்காரணமாக கொடிவேரி அணைக்கு வினாடிக்கு 2,400 கன அடி தண்ணீர் வருகிறது. இதனால் அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணையில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

எனவே பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பவானி ஆற்றில் பரிசல் இயக்கவும் பொதுப்பணித்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இதன் காரணமாக கொடிவேரி அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பி செல்கிறார்கள்.


Next Story