கொடைக்கானல்: தொடர் மழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பபெருக்கு


கொடைக்கானல் பகுதியில் காலை முதல் மாலை வரை தொடர்ந்து மழை பெய்ததால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கொடைக்கானல்,

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வரும் நிலையில் நேற்று பலத்த மழை பெய்தது. அதைத் தொடர்ந்து இன்று அதிகாலை முதல் மாலை வரை அவ்வப்போது லேசான சாரல் மழையும் சில நேரங்களில் கன மழை கொட்டி தீர்த்தது.

இதன் காரணமாக நட்சத்திர ஏரி மீண்டும் நிரம்பி அதிக உபரி நீர் வெளியேறியது. மழை காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் அருவி, வட்டக்கானல் அருவி, பியர் சோலா அருவி போன்றவற்றில் அதிக அளவு வெள்ளம் கொட்டியது. தொடர் மழை காரணமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

பள்ளி மற்றும் கல்லூரி சென்ற மாணவ மாணவியர் மழையில் நனைந்தபடியே. சென்றனர். மழையினை தொடர்ந்து பகல் நேரத்திலேயே கடும் குளிர் நிலவியது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிருக்கு பாதுகாப்பான ஆடைகளை அணிந்த படி நடமாடினர் இருப்பினும் சாலைகளில் பொது மக்களின் நடமாட்டம் வெகுவாகக் குறைந்து காணப்பட்டது.


Next Story