ஜேடர்பாளையம் அருகேமுன்னாள் ஊராட்சி மன்ற தலைவி வீட்டில் மண்எண்ணெய் குண்டு வீச்சுபோலீசார் விசாரணை


ஜேடர்பாளையம் அருகேமுன்னாள் ஊராட்சி மன்ற தலைவி வீட்டில் மண்எண்ணெய் குண்டு வீச்சுபோலீசார் விசாரணை
x
தினத்தந்தி 22 March 2023 7:00 PM GMT (Updated: 22 March 2023 7:01 PM GMT)
நாமக்கல்

பரமத்திவேலூர்:

ஜேடர்பாளையம் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி வீட்டில் மண்எண்ணெய் குண்டு வீசி விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள வடகரையாத்தூர் பகுதியை சேர்ந்தவர் வைத்தியநாதன் (வயது 50). இவருடைய மனைவி பூங்கொடி (40). வடகரையாத்தூர் ஊராட்சி முன்னாள் தலைவியாக இருந்த இவர் அ.தி.மு.க.வை சேர்ந்தவர் ஆவார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வைத்தியநாதன் தனது குடும்பத்தினருடன் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது அவரது வீட்டுக்கு பின்புறம் வழியாக வந்த மர்ம நபர்கள் வைத்தியநாதன் தூங்கி கொண்டிருந்த அறை மற்றும் சமையல் அறையின் ஜன்னல், கண்ணாடி மீது 4 மண்எண்ணெய் குண்டுகளை வீசி விட்டு அங்கிருந்து ஓடி விட்டனர். இதனால் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து தீப்பிடித்து எரிந்தன. எனினும் அதிர்ஷ்டவசமாக ஜன்னல் மூடப்பட்டிருந்ததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இதுகுறித்து வைத்தியநாதன் ஜேடர்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் மற்றும் போலீசார் நேரில் சென்று மண்எண்ணெய் பாட்டில்கள் வீசப்பட்ட இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவியின் வீட்டில் மண்எண்ணெய் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story