கரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2-ம் கட்ட கலந்தாய்வு-விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்


கரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2-ம் கட்ட கலந்தாய்வு-விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
x

கரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2-ம் கட்ட கலந்தாய்வு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரூர்

கரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் https://skilltraining.tn.gov.in/DET என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் 2-ம் கட்ட கலந்தாய்விற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. நாளை (வியாழக்கிழமை) விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாளாகும். 2-ம் கட்ட கலந்தாய்விற்கு பின் நேரடி சேர்க்கைக்கு காலியாக உள்ள இடத்திற்கு வருகிற 30-ந்தேதி முதல் கரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரில் வந்து சேர்ந்து கொள்ளலாம்.

கரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், தையல் தொழில்நுட்ப பயிற்சி (8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி, பயிற்சி காலம் 1 ஆண்டு, மகளிர் மட்டும்). கணினி தொழில்நுட்ப பயிற்சி (10-ம் வகுப்பு தேர்ச்சி, பயிற்சி காலம் 1 ஆண்டு, மகளிர் மட்டும்). மெக்கானிக் ஆட்டோ பாடி ரிப்பேர் (10-ம் வகுப்பு தேர்ச்சி, பயிற்சி காலம் 1 ஆண்டு, ஆண், பெண் இருபாலரும்). ஆபரேட்டர் அட்வான்ஸ்டு மெசின் டூல் (10-ம் வகுப்பு தேர்ச்சி, பயிற்சி காலம் 2 ஆண்டு, ஆண், பெண் இருபாலரும்).

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை, இலவச பஸ் கட்டண சலுகை, மிதிவண்டி, மடிக்கணினி, பாடப்புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் அரசால் வழங்கப்படும். மேலும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களின் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை கரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை தொலைபேசி வாயிலாகவோ அல்லது நேரிலோ தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story