கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு
கச்சிராயப்பாளையம் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு
கச்சிராயப்பாளையம்
கச்சிராயப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட வடக்கனந்தல் நகர தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நகர செயலாளர் ஜெயவேல், பேரூராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினருமான உதயசூரியன் தலைமை தாங்கி ஆயிரம்பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் தண்டபாணி, நகர அவைத் தலைவர் பழனி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அதேபோல் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள புதுப்பட்டில் ஊராட்சி மன்ற தலைவர் சித்ராதாஸ் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் பிரியாவேணுகோபால் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதே போல் ரங்கப்பனூரில் ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா காமராஜன் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.