கார்த்திகை சுருள் விற்பனை


கார்த்திகை சுருள் விற்பனை
x
தினத்தந்தி 5 Dec 2022 6:45 PM GMT (Updated: 5 Dec 2022 6:45 PM GMT)

தீபத்திருநாளை முன்னிட்டு கார்த்திகை சுருள் விற்பனை

விழுப்புரம்

விழுப்புரம்

இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கார்த்திகை தீபத்திருநாள் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்கள், வீடுகள் மற்றும் நிறுவனங்களில் அகல்விளக்குகள் ஏற்றி வழிபடுவது வழக்கம். இந்நிலையில் விழுப்புரம் திரு.வி.க. வீதி, எம்.ஜி.சாலை, பாகர்ஷா வீதி, நேருஜி சாலை, கே.கே.சாலை உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் அகல்விளக்குகள் விற்பனை செய்யப்பட்டன. சிறிய அளவிலான அகல்விளக்குகள் 5 எண்ணிக்கை கொண்டது ரூ.10-க்கும், சற்று பெரியளவு கொண்ட 3 அகல்விளக்குகள் ரூ.10-க்கும், பெரிய அளவிலான டிசைன் விளக்குகள் ரகத்திற்கு ஏற்பவும் விற்பனை செய்யப்பட்டன. இவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர்.

மேலும் இத்திருநாளின்போது சிறுவர்கள், கார்த்திகை சுருளை (மாவளி) கயிற்றில் கட்டி அதற்கு நெருப்பு மூட்டி வட்டம், வட்டமாக சுற்றி விளையாடுவார்கள். அதிலிருந்து தீப்பொறிகள் பூக்கள்போல உதிர்ந்து வட்ட வடிவில் பறந்து செல்வதை கண்டு மகிழ்ச்சியடைவார்கள். சிறுவர்களை மகிழ்விக்கும் இந்த கார்த்திகை சுருள் தற்போது விழுப்புரம் நகரின் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்பட்டது. ஒரு சுருள் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை சிறுவர்கள், இளைஞர்கள் ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர்.


Next Story