காரைக்குடி செஞ்சை புனித தெரசாள் ஆலய திருவிழா


காரைக்குடி செஞ்சை புனித தெரசாள் ஆலய திருவிழா
x
தினத்தந்தி 30 Sep 2023 6:45 PM GMT (Updated: 30 Sep 2023 6:45 PM GMT)

காரைக்குடி செஞ்சை புனித தெரசாள் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சிவகங்கை

கொடியேற்றம்

காரைக்குடி செஞ்சை பங்கு புனித குழந்தை தெரசாள் ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஒரு வாரம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான விழா நேற்று முன்தினம் மாலை சிறப்பு திருப்பலி மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் புனித தெரசாள் கொடியினை ஆர்.எஸ்.மங்கலம் வட்டார அதிபர் தேவ சகாயம் புனிதப்படுத்தி கொடியேற்றி திருப்பலி நிறைவேற்றினார். செஞ்சை ஆலய பங்குத்தந்தை மரியஅந்தோணி முன்னிலை வகித்தார்.

இந்த விழாவையொட்டி தினந்தோறும் நவநாள் திருப்பலியும், வரும் 7-ந்தேதி மாலை திருவிழா புது நன்மை திருப்பலி மற்றும் தேர் பவனி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

நிறைவு விழா

8-ந்தேதி சிவகங்கை மாவட்ட முன்னாள் ஆயர் சூசை மாணிக்கம் தலைமையில் திருவிழா நிறைவு திருப்பலியும், உறுதி பூசுதல் மற்றும் கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

கொடியேற்ற விழாவில் செஞ்சை பங்கு இறை மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை செஞ்சை ஆலய அருள் சகோதரிகள், பங்கு பேரவை, பணி குழுக்கள், பங்குஇறை மக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.


Next Story