காரைக்குடி தொழில் முதலீட்டு கழகத்தில் நடப்பாண்டில் கடன் வழங்க ரூ.30 கோடி இலக்கு-அதிகாரி தகவல்


காரைக்குடி தொழில் முதலீட்டு கழகத்தில் நடப்பாண்டில் கடன் வழங்க ரூ.30 கோடி இலக்கு-அதிகாரி தகவல்
x

காரைக்குடி தொழில் முதலீட்டு கழகத்தில் நடப்பாண்டில் கடன் வழங்க ரூ.30 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று அதிகாரி தகவல் தெரிவித்து உள்ளார்.

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடி தொழில் முதலீட்டு கழகத்தில் நடப்பாண்டில் கடன் வழங்க ரூ.30 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று அதிகாரி தகவல் தெரிவித்து உள்ளார்.

கடன் ஊக்குவிக்கும் முகாம்

தொழில் முனைவோர் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மானியத்துடன் கூடிய கடன்களை தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் வழங்கி வருவதாக அதன் மண்டல மேலாளர் தெரிவித்தார். இதற்குரிய புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களுக்கான கிளை அலுவலகங்கள் காரைக்குடியில் செயல்பட்டு வருகின்றன.இத்திட்டத்தின் கீழ் காரைக்குடி கிளை அலுவலகத்தில் சிறப்பு கடன் ஊக்குவிக்கும் முகாம் நடைபெற்றது. முகாமில் மதுரை மண்டல மேலாளர் புவனேஸ்வரி தலைமை தாங்கி பேசியதாவது:- இந்த நிறுவனம் 1949-ம் ஆண்டில் தொடங்கி 74 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள புதிய தொழில் முனைவோர்களுக்கு இயங்கி வரும் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கும் இதுவரை வங்கிகளின் மூலமாக வழங்கினோம். தற்போது எங்கள் நிறுவனமே நேரடியாக கடன் தொகைகளை வகுக்கப்பட்ட திட்டங்களின் அடிப்படையில் அறிமுகம் செய்து அதிக தொகையாக கோடிக்கணக்கில் 25 சதவீத மானியத்துடன் கூடிய கடனாக வழங்கி வருகிறோம்.

ரூ.30 கோடி கடன்

காரைக்குடி கிளையின் மூலம் கடந்த ஆண்டில் 29 நிறுவனங்களுக்கு ரூ.17 கோடி வரை கடன் கொடுக்கப்பட்டது. நடப்பாண்டில் ரூ.30 கோடி வரை கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதன் மூலம் புதிதாக தொழில் முனைவோர்கள் பயனடையலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் காரைக்குடி தொழில் வணிக கழக தலைவர் சாமி திராவிடமணி, செயலாளர் கண்ணப்பன், பொருளாளர் சரவணன் மாவட்ட தொழில் மைய உதவி பொறியாளர் காளிதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் மேலாளர் எழில் பிரியா நன்றி கூறினார்.


Related Tags :
Next Story