கள்ளக்குறிச்சி வாரச்சந்தையில்ரூ.18¾ லட்சத்துக்கு பருத்தி விற்பனை


கள்ளக்குறிச்சி வாரச்சந்தையில்ரூ.18¾ லட்சத்துக்கு பருத்தி விற்பனை
x
தினத்தந்தி 22 March 2023 6:45 PM GMT (Updated: 22 March 2023 6:46 PM GMT)

கள்ளக்குறிச்சி வாரச்சந்தையில் ரூ.18¾ லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சியில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் புதன்கிழமை அன்று பருத்தி சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று நடைபெற்ற பருத்தி சந்தைக்கு கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், கல்வராயன் மலை, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, தியாகதுருகம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் 170 பேர் விற்பனைக்காக மொத்தம் 801 பருத்தி மூட்டைகளை கொண்டு வந்தனர். அதனை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கினர். இதில் எல்.ஆர்.ஏ.ரக பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.7,699-க்கும், குறைந்தபட்சமாக ரூ.6,258-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.5,218-க்கும், குறைந்தபட்சமாக ரூ.4,098-க்கும் விற்பனையானது. இதன் மூலம் மொத்தம் ரூ.18 லட்சத்து 90 ஆயிரத்துக்கு பருத்தி விற்பனையானது. இந்த தகவலை கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் நிர்மல் தெரிவித்தார்.


Next Story