பெரம்பலூர் பனிமயமாதா ஆலயத்தில் கூட்டு திருப்பலி


பெரம்பலூர் பனிமயமாதா ஆலயத்தில் கூட்டு திருப்பலி
x

பெரம்பலூர் பனிமயமாதா ஆலயத்தில் கூட்டு திருப்பலி நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூரில் உள்ள புனித பனிமயமாதா ஆலயத்தில் நேற்று முன்தினம் பெரியவியாழன் தினநிகழ்ச்சி நடந்தது. நேற்று புனித வெள்ளி நிகழ்ச்சியும், திருச்சிலுவை ஆராதனை, திருவிருந்து, கூட்டுத் திருப்பலியும் நடந்தது. புனித வெள்ளி நிகழ்ச்சியில் பெரம்பலூர் வட்ட முதன்மை குரு ராஜமாணிக்கம் தலைமையில் பாதிரியார் ராஜேஷ், கிறிஸ்தவ பங்கு பேரவையினர் மற்றும் கிறிஸ்தவ பெருமக்கள், பனிமயமாதா திருத்தலத்தை சுற்றி இயேசு சிலுவை காட்சி நடத்தி வலம் வந்தனர். இதனைத்தொடர்ந்து மாலையில் நடந்த நிகழ்ச்சியில் இயேசு சிலுவையை கிறிஸ்தவகன்னிகைகள், கிறிஸ்தவ இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட திரளான கிறிஸ்தவ பெருமக்கள் மண்டியிட்டு முத்தமிட்டு வழிபாடு நடத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் பாதிரியார்கள் பனிமயமாதா தேவாலய பங்கு உறுப்பினர்கள் மற்றும் கிறிஸ்தவ அருட்சகோதரிகள், கத்தோலிக்க சங்க நிர்வாகிகள், நகர்ப்புற மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த கிறிஸ்தவமக்கள் மற்றும் திரளான பெண்கள் கலந்துகொண்டனர். இன்று (சனிக்கிழமை) பெரிய சனிக்கிழமையையொட்டி பாஸ்கா திருவிழிப்பு திருப்பலியும், நாளை (ஞாயிறுக்கிழமை) உயிர்ப்பு ஞாயிறு பெருவிழா திருப்பலியும் நடக்கிறது.


Next Story