நாதஸ்வர கலைஞர் வீட்டில் நகை, பணம் திருட்டு
தேனியில் நாதஸ்வர கலைஞர் வீட்டில் நகை, பணம் திருடுபோனது.
தேனி
தேனி பாரஸ்ட் ரோடு 1-வது தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 32). இவர் நாதஸ்வர கலைஞராக உள்ளார். கடந்த 21-ந்தேதி வேலை தொடர்பாக அவர் வெளியூர் சென்றார். நேற்று காலை தனது வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவில் இருந்த தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு இருந்தது.
மேலும் வீட்டுக்குள் இருந்த பீரோவும் திறந்து கிடந்தது. அதற்குள் இருந்த 2½ பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் திருடுபோயிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சிவக்குமார், இதுகுறித்து தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை-பணத்தை திருடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story