தாலுகா அலுவலகங்களில் இன்று ஜமாபந்தி தொடக்கம்


தாலுகா அலுவலகங்களில் இன்று ஜமாபந்தி தொடக்கம்
x

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 தாசில்தார் அலுவலகங்களிலும் ஜமாபந்தி இன்று தொடங்குகிறது.

நாமக்கல்

ஜமாபந்தி இன்று தொடக்கம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் ஜமாபந்தி இன்று (புதன்கிழமை) தொடங்கி ஜூலை 2-ந் தேதி வரை நடக்கிறது.

அதன்படி சேந்தமங்கலம் தாலுகாவில் கலெக்டர் தலைமையில் இன்று முதல் 1. 6.2023 வரையிலும், குமாரபாளையம் தாலுகாவில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை தலைமையில் இன்று முதல் 26-ந் தேதி வரையிலும் ஜமாபந்தி நடக்கிறது.

கொல்லிமலை

நாமக்கல் தாலுகாவில் இன்று முதல் 2.6.2023 வரை தனித் துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பிரபாகரன் தலைமையிலும், ராசிபுரம் தாலுகாவில் இன்று முதல் 1.6.2023 வரை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் தலைமையிலும், கொல்லிமலை தாலுகாவில் இன்றும், நாளையும் (வியாழக்கிழமை) உதவி ஆணையர் (கலால்) செல்வி தலைமையிலும் ஜமாபந்தி நடக்கிறது.

மோகனூர் தாலுகாவில் இன்று முதல் 31.5.2023 வரை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுகந்தி தலைமையிலும், திருச்செங்கோடு தாலுகாவில் இன்று முதல் 7.6.2023 வரை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முருகேசன் தலைமையிலும், பரமத்தி வேலூர் தாலுகாவில் இன்று முதல் 2.6.2023 வரை திருச்செங்கோடு உதவி கலெக்டர் கவுசல்யா தலைமையிலும் ஜமாபந்தி நடைபெற உள்ளது.

இந்த ஜமாபந்தி அரசு விடுமுறை, சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை நீங்கலாக அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணிக்கு தாசில்தார் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் அனைத்து துறை அலுவலர்களும் பங்குபெற்று, பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களை பெற்று, குறைகளை நிவர்த்தி செய்ய உள்ளனர். எனவே, நாமக்கல் மாவட்ட பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story