ஆர்.டி.மலையில் இன்று ஜல்லிக்கட்டு


ஆர்.டி.மலையில் இன்று ஜல்லிக்கட்டு
x

ஆர்.டி.மலையில் இன்று ஜல்லிக்கட்டு நடக்கிறது.

கரூர்

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள ஆர்.டி.மலையில் பொங்கல் பண்டிகையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு வொகுவிமரிசையாக நடைபெறும். அதேபோல் இந்தாண்டும் ஜல்லிக்கட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. ஜல்லிக்கட்டை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைக்கிறார். இதையடுத்து முன்னதாக வாடிவாசல், பார்வையாளர்கள் அமரும் இடம், தடுப்பு வேலிகள், மருத்துவ சேவைக்கான இடம், பரிசு வழங்குவோர் இடம், அவசர வழி, வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடுகளும் முடிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்த தயார் நிலையில் உள்ளது. இதையடுத்து மேற்கண்ட அனைத்து பணிகளையும் நேற்று மாவட்ட வருவாய் அதிகாரி லியாகத் அதிகாரிகளுடன் வந்து ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் முரளிதரன், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன், குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர், ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் உடனிருந்தனர். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க கரூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, அரியலூர், தஞ்சாவூர் உள்பட சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து 800 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story