ஜல்லிக்கட்டு


ஜல்லிக்கட்டு
x

மானாமதுரை அருகே ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.

சிவகங்கை

மானாமதுரை,

மானாமதுரை அருகே ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. காளை முட்டியதில் 10 பேர் காயம் அடைந்தனர்.

ஜல்லிக்கட்டு


மானாமதுரை அருகே பெரும்பச்சேரி கிராமத்தில் உள்ள சமயண சாமி கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 400-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளும், நூற்றுக்கணக்கான மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர். இதையடுத்து முதலில் கோவில் காளைக்கு மரியாதை செய்யப்பட்டு அவிழ்த்து விடப்பட்டது. அதன் பின்னர் ஒவ்வொரு காளைகளும் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டது.

10 பேர் காயம்

வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை அங்கு தயாராக இருந்த மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். இதில் ஒரு சில காளைகள் மட்டும் மாடுபிடி வீரர்களிடம் பிடிபட்டது. பெரும்பாலான காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் பரிசுகளை தட்டிச் சென்றது.

போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் சைக்கிள், கட்டில், தங்கக்காசு, வெள்ளிக்காசு உள்பட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக காளைகள் முட்டியதில் 10 மாடு பிடிவீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சையளித்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை பெரும்பச்சேரி கிராமத்தினர் செய்திருந்தனர். ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story