இரூர் ரேஷன் கடையில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை


இரூர் ரேஷன் கடையில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை
x

இரூர் ரேஷன் கடையில் இன்று தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு கிலோ தக்காளி உழவர் சந்தையில் ரூ.160-க்கும், காய்கறி மார்க்கெட்டில் ரூ.180-க்கும், சில்லரை கடைகளில் ரூ.200-ஐ தாண்டியும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. ஏற்கனவே மற்ற மாவட்டங்களில் தமிழக அரசின் உத்தரவின்படி ரேஷன் கடைகள் மூலம் கூட்டுறவுத்துறையினர் தக்காளியை குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் தக்காளியை குறைந்த விலையில் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும் என்று இல்லத்தரசிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் கூட்டுறவுத்துறை சார்பில் ஆலத்தூர் தாலுகா, இரூர் ரேஷன் கடையில் இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணி முதல் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு தக்காளி விற்பனை செய்யப்படவுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். மற்ற ரேஷன் கடைகளிலும் இதேபோல் தக்காளி விற்பனை செய்ய வேண்டும் என்றும் இல்லத்தரசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story