கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் தடயவியல் துறையினர் ஆய்வு


கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் தடயவியல் துறையினர் ஆய்வு
x

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி தற்கொலை வழக்கு தொடர்பாக, நேற்று முன்தினம் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் மாணவி படித்த தனியார் பள்ளி, வாகனங்கள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

இந்த போராட்டத்தால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நீடித்து வருவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கலவரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவி மரண வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பள்ளி வளாகம், வகுப்பறைகள் மற்றும் வாகன நிறுத்துமிடம், மாணவி உயிரிழந்த பகுதி உள்ளிட்ட இடங்களில் தடயவியல் துறையினர் தடயங்கள் ஏதும் கிடைக்கிறதா என ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சூறையாடப்பட்ட பள்ளியில் சேதம் குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.


Next Story