கிருஷ்ணகிரியில்300 அடி தொலைவில் கிடந்த இரும்பு பொருள்பட்டாசு குடோன் வெடிவிபத்தில் தூக்கி வீசப்பட்டதா? போலீஸ் விசாரணை


கிருஷ்ணகிரியில்300 அடி தொலைவில் கிடந்த இரும்பு பொருள்பட்டாசு குடோன் வெடிவிபத்தில் தூக்கி வீசப்பட்டதா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 3 Aug 2023 7:30 PM GMT (Updated: 3 Aug 2023 7:30 PM GMT)
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரியில் 300 அடி தொலைவில் கிடந்த இரும்பு பொருள் பட்டாசு வெடி விபத்தில் தூக்கி வீசப்பட்டதாக இருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இரும்பு பொருள்

கிருஷ்ணகிரி பழையபேட்டை பட்டாசு குடோனில் கடந்த மாதம் 29-ந்தேதி நடந்த வெடிவிபத்தில் 9 பேர் இறந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் சிதறி சாலையில் ஆங்காங்கே கிடந்தன. பட்டாசு குடோனின் எதிர்புறம் 200 அடி தொலைவில் ஒரு வீட்டின் சுவற்றில் மனித கால் ஒன்று தூக்கி வீசப்பட்ட நிலையில் கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தில் இருந்து 300 அடி தொலைவில் இரும்பு பொருள் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

விசாரணை

இது பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் ஒருவித இரும்பினால் ஆன பொருளாகும். இதில் மருந்தை நிரப்பி பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது விபத்து நடந்தபோது பட்டாசு குடோனில் இருந்து தூக்கி வீசப்பட்டு சுமார் 300 அடி தொலைவில் கிடந்துள்ளது. வெடி மருந்தை நிரப்பி இந்த இரும்பு குழாயை வைத்து தட்டிய போது தீ விபத்து நடந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story