காஞ்சீபுரத்தில் நவீன முறையில் கல்வி கற்பித்தல் முறை அறிமுகம்


காஞ்சீபுரத்தில் நவீன முறையில் கல்வி கற்பித்தல் முறை அறிமுகம்
x

காஞ்சீபுரத்தில் சோழன் பள்ளியில் நவீன முறையில் கல்வி கற்பித்தல் முறை மற்றும் வருங்கால இந்தியாவில் கல்வி முறையில் மாற்றங்கள் குறித்து பெற்றோர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரத்தில் சோழன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 21-ம் நூற்றாண்டிற்கான கற்றல், கற்பித்தலில் நவீன முறையில் கல்வி கற்பித்தல் முறை மற்றும் வருங்கால இந்தியாவில் கல்வி முறையில் மாற்றங்கள் குறித்து பெற்றோர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

பள்ளியின் முதல்வர் தயாளன் அனைத்து பெற்றோர்களையும் வரவேற்றார். பள்ளியின் நிர்வாக அலுவலர் காயத்ரி முன்னிலை வகித்தார். பள்ளியின் தாளாளர் சஞ்ஜீவீ ஜெயராமன், 21-ம் நூற்றாண்டிற்கான கற்றல் கற்பித்தலில் நவீன முறையில் கல்வி கற்பித்தல் முறை குறித்து பொற்றோர்களுக்கு விளக்கி கூறி அவர்களுடன் கலந்துரையாடினார்.

இது குறித்து பெற்றோர்கள் தங்களின் கருத்துகளை கடிதம் மூலம் பள்ளி நிர்வாகத்திடம் வழங்கினார்கள். இதில் பள்ளியின் நிர்வாக இயக்குனர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.


Next Story