கணவர்-உறவினர்களின் தலையீட்டினைஅனுமதிக்க கூடாது


கணவர்-உறவினர்களின் தலையீட்டினைஅனுமதிக்க கூடாது
x

கணவர்-உறவினர்களின் தலையீட்டினை அனுமதிக்க கூடாது

திருவாரூர்

கிராம ஊராட்சி நிர்வாகத்தில் தலைவர்களின் கணவர்-உறவினர்களின் தலையீட்டினை அனுமதிக்க கூடாது என கலெக்டர் சாருஸ்ரீ பேசினார்.

ஆலோசனை கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பெண் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஊராட்சி நிர்வாக செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கி பேசுகையில், திருவாரூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாக கூட்டமைப்பின் செயல்பாடுகளை சரியான வகையில் வழிநடத்திடவும், கிராம ஊராட்சியால் அளிக்கப்பட வேண்டிய சேவைகள், நிறைவேற்ற வேண்டிய கட்டாய கடமைகள், விருப்பக்கடமைகள் ஆகியவற்றை சிறப்பான முறையில் செயல்படுத்திடுவது குறித்து எடுத்து கூறப்பட்டது.

அனுமதிக்க கூடாது

கிராம ஊராட்சி நிர்வாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களின் கணவர், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் தலையீட்டினை எவ்விதத்திலும் அனுமதிக்க கூடாது. ஊராட்சி மன்ற நிர்வாகத்தினை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளே செயல்படுத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்ரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் சந்திரா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் பொன்னியின்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story