ரூ.12 லட்சத்தில் சிறுபாலம், கழிவுநீர் வாய்க்கால் கட்டும் பணி தீவிரம்
திருக்கோவிலூர் அருகேரூ.12 லட்சத்தில் சிறுபாலம், கழிவுநீர் வாய்க்கால் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே செங்கனாங்கொள்ளை கிராம ஊராட்சியில் கழிவுநீர் வாய்க்கால் மற்றும் சிறுபாலம் வசதி செய்து கொடுக்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் செல்வி கோபி ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயனிடம் கோரிக்கை வைத்தார். இது தொடர்பாக வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மாவட்ட நிர்வாகத்திடம் பரிந்துரை செய்தார். இதையடுத்து செங்கனாங்கொள்ளை கிராமத்தில் சிறுபாலம், கழிவுநீர்வாய்க்கால் வசதி அமைப்பதற்கு ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கழிவுநீர் வாய்க்கால் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை ஊராட்சி மன்ற தலைவர் செல்விகோபி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story