முக்கொம்பு மேலணை மதகுகள் சீரமைப்பு பணி தீவிரம்


முக்கொம்பு மேலணை மதகுகள் சீரமைப்பு பணி தீவிரம்
x
திருச்சி

ஜீயபுரம், மே.25-

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையொட்டி முக்கொம்பு மேலணை மதகுகள் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தண்ணீர் திறப்பு

மேட்டூர் அணையில் இருந்து தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்படும். தற்போது, கர்நாடகாவில் தொடர் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து நிரம்பும் தருவாயில் உள்ளது.

இதனால் மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையை திறந்து வைத்தார்.

மதகுகள் சீரமைப்பு பணி தீவிரம்

இந்த தண்ணீர் நாளை (வியாழக்கிழமை) மாலைக்குள் முக்கொம்பு மேலணை வந்தடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதையொட்டி முக்கொம்பு மேலணையில் உள்ள மதகுகளை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மதகுகளை ஏற்றி இறக்க பயன்படுத்தப்படும் ராட்சத பற்களுக்கு கிரீஸ் தடவும் பணியும், ராட்சத சங்கிலிகளுக்கு ஆயில் விடும் பணியும் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் இன்று (புதன்கிழமை) இரவுக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் மேலணை முழுவதும் வர்ணம் பூசும் பணியும் நடந்து வருகிறது. தண்ணீர் திறந்து விடும் சமயத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் வரவேற்க உள்ளனர்.


Related Tags :
Next Story