தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி விடுதியில் கிருமிநாசினி தெளிப்பு பணி தீவிரம்


தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், விடுதியில் கிருமிநாசினி தெளிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், விடுதி மற்றும் கல்லூரி வளாகத்தில் கிருமிநாசினி தெளிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள விடுதியில் பல்வேறு ஊர்களை சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் சில மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், விடுதியில் இருந்த அனைத்து மாணவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 45 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கல்லூரி விடுதி தினமும் கிருமி நானிசி கொண்டு சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ே மருத்துவ கல்லூரி மாணவர்கள் யாருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை

30 பேர் பாதிப்பு

மேலும் தூத்துக்குடி மாநகர நல அலுவலர் அருண்குமார் தலைமையிலான சுகாதார அலுவலர்கள் நேற்று தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். சிகிச்சை பெற்று வந்த மாணவர்களுடன் கலந்துரையாடி கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் 30 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 173 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story