கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தொடக்கம்


கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தொடக்கம்
x

தத்துவாஞ்சேரியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தொடக்கம்

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்:

திருவிடைமருதூர் அருகே தத்துவாஞ்சேரியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கான இரும்பு கம்பம் நடும் பணி நடந்தது. இதற்கான தொடக்க நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புடன் இணைந்த டெல்டா வணிகர் நல சங்க கூட்டமைப்பு சார்பாக மாநில தலைவர் விக்ரமராஜா அறிவுறுத்தலின்படி, டெல்டா கூட்டமைப்பின் தலைவர் முகமது சுகைல், செயலாளர் செவன் லெவன் உதயகுமார், பொருளாளர் ரகுராமன், கவுரவ தலைவர் அசோகன் ஆகியோர் தலைமை தாங்கினர். தத்துவாஞ்சேரி அனைத்து வணிகர் நல சங்க பொறுப்பாளர்கள் அசோகன், அன்சாரி, கிருஷ்ணா அப்பா, ஹாஜாமைதீன் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதில் டெல்டா கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் ஜமால் முகமது, பாரதி, ராஜா மைதீன், சரவணன், ரவிச்சந்திரன், அக்பர் அலி, பிரபாகரன், கரிகாலன், குமார், கருணாகரன், ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர், செய்தி தொடர்பாளர் லுக்மான் உமர் ஆகியோர் முன்னிலையில் கண்காணிப்பு கேமராக்களுக்கு இரும்பு கம்பம் நடப்பட்டது. இன்னும் ஒரு சில வாரங்களில் விக்ரமராஜா கண்காணிப்பு கேமராக்களை இயக்கி வைக்க உள்ளார். கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு மளிகை கடை நடத்த முடியாமல் இருந்த டெல்டா கூட்டமைப்பு பொறுப்பாளர் அக்பர் அலிக்கு சோழபுரம் பள்ளிவாசல் நாட்டாமை பாசித் ரூ.50 ஆயிரம் வழங்கினார். முன்னதாக நடந்த கூட்டத்தில் டெல்டா கூட்டமைப்பின் கிளை சங்கங்கள் சோழபுரம், திருப்பனந்தாள், தத்துவாஞ்சேரி, பந்தநல்லூர் ஆகிய வணிக உறுப்பினர்களுக்கு இலவச விபத்து மருத்துவக் காப்பீடு வருகிற 31-ந் தேதிக்குள் வழங்குவது. முதல்-அமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story