அரசு மாணவர் விடுதியில் கோட்டாட்சியர் ஆய்வு


அரசு மாணவர் விடுதியில் கோட்டாட்சியர் ஆய்வு
x

சேத்தியாத்தோப்பு அரசு மாணவர் விடுதியில் கோட்டாட்சியர் ரவி ஆய்வு மேற்கொண்டார்.

கடலூர்

சேத்தியாத்தோப்பு .

சேத்தியாத்தோப்பில் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இங்கு சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு மாணவர்களுக்கு தரமான முறையில் உணவு வழங்கப்படுகிறதா? என்று சரிபார்த்தார். பின்னர் அங்கிருந்த மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது மாணவர்கள் கூறுகையில், விடுதி தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

இங்கு போதுமான இடவசதி இல்லை. எனவே எங்களுக்கு புதிய விடுதி கட்டித்தர வேண்டும் என்றனர். அதற்கு கோட்டாட்சியர் ரவி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த ஆய்வின்போது விடுதி காப்பாளர் ஸ்ரீதரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

மாணவிகள் விடுதி

அதனை தொடர்ந்து சென்னிநத்தத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கழிப்பறை சரியாக சுத்தம் செய்து வைக்கப்பட்டுள்ளதா? மாணவிகளுக்கு சரியான முறையில் உணவு வழங்கப்படுகிறதா? என்று சரிபார்த்தார். அப்போது சேத்தியாத்தோப்பு வருவாய் ஆய்வாளர் ஜான் பிரிட்டோ, கிராம நிர்வாக அலுவலர் சேஷாத்திரி, உதவியாளர் அன்பு உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story