பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கலெக்டர் ஆய்வு


பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 21 Feb 2023 6:45 PM GMT (Updated: 21 Feb 2023 6:45 PM GMT)

பெல்லாரம்பள்ளி, மோரமடுகு ஊராட்சிகளில் தொடக்கப்பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி

பெல்லாரம்பள்ளி, மோரமடுகு ஊராட்சிகளில் தொடக்கப்பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், பெல்லாரம்பள்ளி, மோரமடுகு, ஊராட்சிகளில் அங்கன்வாடி மையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ரேஷன் கடைகளில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக கலெக்டர் பெல்லாரம்பள்ளி ஊராட்சியில் ரேஷன் கடையை ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது குடும்ப அட்டைகள் விவரங்கள், அத்தியாவசிய பொருட்கள் இருப்பு விவரங்கள், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட பொருட்கள் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து பதிவேடுகள் மற்றும் மின்னணு எந்திரத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் தாமதமின்றி வழங்க வேண்டும். ரேஷன் கடையை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என விற்பனையாளருக்கு அறிவுரை வழங்கினார்.

ஆரம்ப சுகாதார நிலையம்

பின்னர் பெல்லாரம்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர், நோயாளிகள் வருகை, மருந்துகள் இருப்புகள், மேல்சிகிச்சைகாக பரிந்துரை செய்யப்பட்ட நோயாளிகள் விவரங்கள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதையடுத்து மோரமடுகு ஊராட்சியில் அங்கன்வாடி மையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் குடிநீர், கழிப்பறை வசதிகள் மற்றும் பள்ளி சுற்றி தூய்மை பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளிடம் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் விதம் மற்றும் மாணவர்களின் கல்வித்திறனை கேட்டறிந்தார். பள்ளி வளாகத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என ஆசிரியர்களை கலெக்டர் கேட்டுக் கொண்டார்.

இந்த ஆய்வின் போது துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.


Next Story