மழை நீரை வெளியேற்றும் பணி


தினத்தந்தி 10 Dec 2022 6:45 PM GMT (Updated: 10 Dec 2022 6:45 PM GMT)

காவேரிப்பட்டணத்தில் மழை நீரை வெளியேற்றும் பணியை பேரூராட்சி தலைவர் நேரில் ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்

காவேரிப்பட்டணம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். இதையடுத்து தேங்கிய மழை நீரை வெளியேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து பேரூராட்சி சார்பில் மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதனை பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், கவுன்சிலர்கள் தமிழ்செல்வி சோபன்பாபு, நித்தியா முத்துக்குமார், அமுதா பழனி, கோகுல்ராஜ், கீதா ஞானசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story