கல்லூரி மாணவ-மாணவிகள் விடுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு


கல்லூரி மாணவ-மாணவிகள் விடுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
x
தினத்தந்தி 28 Nov 2022 6:45 PM GMT (Updated: 28 Nov 2022 6:46 PM GMT)

பர்கூரில் கல்லூரி மாணவ-மாணவிகள் விடுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பீலா ராஜேஷ் திடீரென ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி

பர்கூர்

பர்கூரில் கல்லூரி மாணவ-மாணவிகள் விடுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பீலா ராஜேஷ் திடீரென ஆய்வு செய்தார்.

விடுதியில் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பீலா ராஜேஷ் பர்கூரில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவிகள் விடுதியில் நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அய்யப்பன், தாசில்தார் பன்னீர்செல்வி மற்றும் விடுதி காப்பாளர்கள் உடன் இருந்தனர்.

இந்த ஆய்வின் போது மாணவிகளிடம், உணவு, குடிநீர், மின்சார வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா? என கேட்டறிந்தார். பின்னர் அருகில் உள்ள ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியில் அவர் ஆய்வு செய்தார்.

நிவர்த்தி

அப்போது மாணவர்களிடம் குறைகள் குறித்து அவர் கேட்டறிந்தார். தொடர்ந்து எந்தெந்த மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் படிக்கிறீர்கள் என்றும், அவர்களது கல்வி, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் குறித்தும் அவர் கேட்டறிந்தார். அப்போது விடுதிகளில் ஏதேனும் குறைகள் இருப்பின் உடனடியாக தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் எனவும் மாணவர்களிடம் கூறினார்.


Next Story