தடுப்பணையில் எம்.எல்.ஏ. ஆய்வு


தடுப்பணையில் எம்.எல்.ஏ. ஆய்வு
x
தினத்தந்தி 9 Oct 2022 6:45 PM GMT (Updated: 9 Oct 2022 6:46 PM GMT)

தர்மபுரி அருகே தடுப்பணையில் கோவிந்தசாமி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

தர்மபுரி

பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து தர்மபுரி ராமாக்காள் ஏரி, சோகத்தூர், கடகத்தூர், கே.நடுஅள்ளி, கொளகத்தூர் ஆகிய ஏரிகளுக்கு உபரி நீரை கொண்டு வர வேண்டும் என்று கடந்து சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறையினர் இந்த ஏரிகளுக்கு உபரிநீரை திருப்பி விட்டனர். இந்த நிலையில் சின்னாறு அணையில் இருந்து வரும் உபரிநீர் தர்மபுரி அருகே கடுக்காப்பட்டி பிரிவில் உள்ள தடுப்பனையில் இருந்து தர்மபுரி ராமாக்காள் ஏரி உள்ளிட்ட ஏரிகளுக்கு செல்லும் கால்வாய்களை கோவிந்தசாமி எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஏரிகளுக்கு செல்லும் கால்வாயில் உள்ள அடைப்புகளை அந்த பகுதி விவசாயிகள் சரி செய்து முறையாக தண்ணீர் செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் அப்பாமணி, ஒன்றியக்குழு உறுப்பினர் இருசன், கூட்டுறவு சங்க தலைவர் தேவராஜ், ஒன்றிய துணை செயலாளர் சம்பத், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாதையன், மற்றும் கட்சி நிர்வாகிகள் புஷ்பன், முருகன், விவசாயிகள் உடன் இருந்தனர்.


Next Story