குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட சாலையை சீரமைக்க வலியுறுத்தல்


குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
x

அருப்புக்கோட்டையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,


அருப்புக்கோட்டையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடிநீர் குழாய்

அருப்புக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலைகள் தோண்டப்பட்டு வருகிறது. இவ்வாறு தோண்டப்படும் சாலைகள் மீண்டும் புதிதாக போடப்படுவது இல்லை.

இந்தநிலையில் அருப்புக்கோட்டை நகராட்சிக்கு விரைவில் பாதாள சாக்கடை திட்டம் வர உள்ளதால் தோண்டப்படும் சாலைகளுக்கு பதிலாக வேறு சாலைகள் புதிதாக தற்போது போடப்படாது என நகர்மன்ற கூட்டத்தில் நகர்மன்ற தலைவர் தெரிவித்தார். ஆனால் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்படும் சாலைகள் சரியாக மூடப்படாமல் குண்டும், குழியுமாக ஆங்காங்கே காணப்படுகிறது.

சேதமடைந்த சாலை

மேலும் நகரின் பெரும்பாலான பகுதிகளில் தோண்டப்படும் சாலைகளால் புழுதிக் காடாக காணப்படுகிறது. வாகனங்கள் செல்லும் போது புழுதி காற்றில் பறந்து நகர் முழுவதும் புழுதிப்படலமாக காணப்படுகிறது.

இதனால் மோட்டார் சைக்கிளில் செல்வோர், பொதுமக்கள் கடும் சிரமம் அடைகின்றனர். அதிகமான தூசி காரணமாக பொது மக்களுக்கு பல்வேறு சுவாச பிரச்சினைகள் உண்டாகிறது. சாலை முழுவதும் மண் மற்றும் கற்கள் பரந்து காணப்படுவதால் மோட்டார் சைக்கிளில் செல்வோர் அடிக்கடி கீழே விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. ஆதலால் தோண்டப்பட்ட பகுதிகளில் புதிய சாலை அமைக்காவிட்டாலும், தூசி பரவாத வண்ணமும், போக்குவரத்திற்கு ஏற்ற வகையிலும் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story