தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுவினர் விரைவில் வருகைகலெக்டர் தகவல்


தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுவினர் விரைவில் வருகைகலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 20 July 2023 7:30 PM GMT (Updated: 20 July 2023 7:31 PM GMT)
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுவினர் விரைவில் வர உள்ளதாக கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சட்டமன்ற பேரவைமனுக்கள் குழு

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2023-24-ம் ஆண்டிற்கான மனுக்கள் குழு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விரைவில் கூடுவதென முடிவு செய்துள்ளது. இதையொட்டி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனி நபர், சங்கங்களோ, நிறுவனங்களோ, தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச்சினைகள், குறைகள் குறித்து மனுக்களை மனுதாரர்கள் கையொப்பமிட்டு, "தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை, சென்னை - 600 009" என்ற முகவரிக்கு வருகிற ஆகஸ்டு மாதம் 2-ந் தேதிக்குள் அனுப்பலாம். மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருத்தல் வேண்டும். பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொதுப்பிரச்சினைகள் குறித்ததாக மனுக்கள் இருக்கலாம். மனுக்கள் ஒரேயொரு பிரச்சினையை உள்ளடக்கியதாகவும், ஒரேயொரு துறையைச் சார்ந்ததாகவும் இருக்கவேண்டும். மனுக்கள் பொது முக்கியத்துவம் வாயந்த பொருள் ஒன்றினை உள்ளடக்கியதாக இருத்தல்வேண்டும்.

உண்மை நிலவரம்

ஆனால் மனுவில், தனிநபர் குறை, நீதிமன்றத்தின் முன் வழக்கிலுள்ள பொருள், வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், பட்டா மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள், வங்கிக்கடன், தொழிற்கடன், அரசு பணியில் மாற்றம், அரசு அலுவலர்களின் குறைகளை வெளிப்படுத்துதல் போன்றவை இருக்ககூடாது. சட்டமன்ற பேரவை விதிகளின் வரம்பிற்கு உட்பட்ட மனுக்களை, மனுக்கள் குழு மாவட்டத்திற்கு வரும் போது, ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும். ஒரே மனுதாரர் பல மனுக்களை அனுப்பி இருந்தாலும், குழு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும் ஒரு மனு மட்டுமே ஆய்விற்கு எடுத்து கொள்ளப்படும்.

அப்போது மனுதாரர் முன்னிலையில் குழுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுவில் உள்ள பொருள் குறித்து உண்மை நிலவரம் கேட்டறியப்படும். இது குறித்து மனுதாரர்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து குழு ஆய்வு செய்யும் நாளில் தகவல் தனியாக அனுப்பப்படும். வருகிற ஆகஸ்டு மாதம் 2-ந் தேதிக்கு பின்னர் பெறப்படும் மனுக்கள் குழுவின் ஆய்விற்கு எடுத்துக்கொள்ள இயலாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது


Next Story