'பாரம்பரிய தற்காப்பு கலைகளின் தாயகம் இந்தியா' - கவர்னர் ஆர்.என்.ரவி


பாரம்பரிய தற்காப்பு கலைகளின் தாயகம் இந்தியா - கவர்னர் ஆர்.என்.ரவி
x

பாரம்பரிய தற்காப்பு கலைகளின் தாயகம் இந்தியா என கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சர்வதேச மற்றும் தேசிய அளவில் புகழ்பெற்ற 50 தற்காப்பு கலைகளை பயிற்றுவிக்கும் ஆசான்களுக்கு இன்று கவர்னர் ஆர்.என்.ரவி விருதுகளை வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், சிலம்பம், மான் கொம்பு, குத்துவரிசை, வாள் சண்டை உள்ளிட்ட பாரம்பரிய கலைகளின் தாயகம் இந்தியா என்றும், இங்கிருந்தே இந்த கலைகள் மேலை நாடுகளுக்கு பரப்பப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் யோகா, சிலம்பம் போன்றவற்றை கற்பதால் உடல், மனம் தெளிவடைவதுடன், ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் வழிவகுக்கும் என அவர் குறிப்பிட்டார். தமிழகத்தின் பாரம்பரிய தற்காப்புக் கலைகளை பள்ளி, கல்லூரியில் பாடத் திட்டமாக கொண்டு வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். இந்த கலைகளை தேசிய அளவில் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் கொண்டு செல்ல வேண்டும் என அவர் கூறினார்.




Next Story