சுயேச்சை வேட்பாளர் வெற்றி


சுயேச்சை வேட்பாளர் வெற்றி
x
தினத்தந்தி 20 Sep 2023 7:30 PM GMT (Updated: 20 Sep 2023 7:30 PM GMT)

காட்டம்பட்டி ஊராட்சி துணைத்தலைவர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி

கோயம்புத்தூர்

அன்னூர்

அன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் 21 ஊராட்சிகள் உள்ளன. இதில் காட்டம்பட்டி ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளது. தலைவராக காயத்திரி பாலகிருஷ்ணன், துணைத்தலைவராக மதியழகன் ஆகியோர் இருந்தனர். இதில் மதியழகன் கடந்த 10 நாட்களுக்கு முன் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இதையடுத்து ஊராட்சிக்கான துணைத்தலைவர் தேர்தல் நேற்று முன்தினம் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சுயேச்சை வேட்பாளரான 1-வது வார்டு உறுப்பினர் லட்சுமிகாந்த் மற்றும் 8-வது வார்டு உறுப்பினர்கள் சந்தானம், தர்மராஜ் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் லட்சுமிகாந்த் 4 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


Related Tags :
Next Story