மக்காச்சோளம் வரத்து அதிகரிப்பு


மக்காச்சோளம் வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 28 Feb 2023 6:45 PM GMT (Updated: 28 Feb 2023 6:46 PM GMT)

அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு மக்காச்சோளம் வரத்து அதிகரிப்பு ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு தானியங்கள் விற்பனை

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூரை அடுத்த அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு நடப்பு பருவத்தில் விவசாய விளைபொருட்கள் அதிக அளவு வரத்து உள்ளது. குறிப்பாக நேற்று முன்தினம் ஒரே நாளில் 7 ஆயிரம் நெல் மூட்டைகள் வந்தன. நெல் ஒரு மூட்டை குறைந்தபட்சமாக ரூ.1,185 ஆகவும், அதிகபட்சம் ரூ.1,982 ஆகவும் இருந்தது. இதேபோல் மணிலா ஒரு மூட்டை குறைந்தபட்சம் ரூ.7,656 ஆகவும், அதிகபட்சம் ரூ.9,316 ஆகவும், எள் ஒரு மூட்டை குறைந்தபட்சம் ரூ.9,316 ஆகவும், அதிகபட்சம் ரூ.13,009 ஆகவும் இருந்தது.

உளுந்து ஒரு மூட்டை குறைந்தபட்சம் ரூ.4,689 ஆகவும், அதிகபட்சம் ரூ.7,155 ஆகவும், பச்சைப்பயிர் ஒரு மூட்டை குறைந்தபட்சம் ரூ.6,609 ஆகவும், அதிகபட்சம் ரூ.7,296 ஆகவும், நாட்டுக்கம்பு ஒரு மூட்டை குறைந்தபட்சம் ரூ.6,950 ஆகவும், அதிகபட்சம் ரூ.7,150 ஆகவும், உயர்ரக கம்பு ஒரு மூட்டை குறைந்தபட்சம் ரூ.2,309 ஆகவும், அதிகபட்சம் ரூ.2,788 ஆகவும், கேழ்வரகு ஒரு மூட்டை குறைந்தபட்சம் ரூ.2,385 ஆகவும், அதிகபட்சம் ரூ.3,086 ஆகவும் இருந்தது. நேற்று ஒரே நாளில் 1,500 மூட்டை மக்காச்சோளம் வரத்து வந்தது. இது ஒரு மூட்டை குறைந்தபட்சம் ரூ.2,124 ஆகவும், அதிகபட்சம் ரூ.2,209 ஆகவும், கொள்ளு குறைந்தபட்சம் ரூ.2,899 ஆகவும், அதிகபட்சம் ரூ.5,389 ஆகவும் விற்பனையானது. பனிப்பயிர் ஒரு மூட்டை குறைந்தபட்சம் ரூ.8,089 ஆகவும், அதிகபட்சம் ரூ.8,200 ஆகவும், தட்டைப்பயிர் ஒரு மூட்டை குறைந்தபட்சம் ரூ.3,289 ஆகவும், அதிகபட்சம் ரூ.6,516 ஆகவும், தினை ஒரு மூட்டை ரூ.3,488-க்கு விற்றது. தேங்காய் ஒரு மூட்டை குறைந்தபட்சம் ரூ.4,659 ஆகவும், அதிகபட்சம் ரூ.5,859 ஆகவும் இருந்தது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 777 மெட்ரிக் டன் தானியங்கள் வரத்து வந்து ரூ.2 கோடிக்கு விற்பனை நடைபெற்றது. எள் மற்றும் மணிலாவுக்கு கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story