காய்கறிகள் விற்றுவிட்டு வந்தபோது சம்பவம்:மின்சாரம் தாக்கி விவசாயி இறந்ததற்கு யாரிடம் இழப்பீடு பெறுவது?- கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

காய்கறிகள் விற்றுவிட்டு வந்தபோது சம்பவம்:மின்சாரம் தாக்கி விவசாயி இறந்ததற்கு யாரிடம் இழப்பீடு பெறுவது?- கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
x

காய்கறிகள் விற்றுவிட்டு வந்தபோது, மின்சாரம் தாக்கி விவசாயி இறந்ததற்கு யாரிடம் இழப்பீடு பெறுவது என்பதை விசாரித்து கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை

காய்கறிகள் விற்றுவிட்டு வந்தபோது, மின்சாரம் தாக்கி விவசாயி இறந்ததற்கு யாரிடம் இழப்பீடு பெறுவது என்பதை விசாரித்து கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

காய்கறி வியாபாரி

தூத்துக்குடி மாவட்டம் ஆரோக்கியபுரத்தை சேர்ந்த ஒரு பெண், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எனது கணவர் ஜெயகணேசன். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். எங்கள் தோட்டத்தில் விளையும் காய்கறிகளை தூத்துக்குடி காற்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருவார். அந்த வகையில் கடந்த மே மாதம் 25-ந்தேதி வழக்கம் போல மார்க்கெட்டில் காய்கறிகளை விற்றுவிட்டு நடந்து வந்தார்.

அங்குள்ள அண்ணா சிலையைச்சுற்றி அமைக்கப்பட்டு இருந்த வேலியை தொட்டு உள்ளார். அப்போது அதில் மின்கசிவு இருந்ததால், என் கணவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த அண்ணா சிலையானது, தி.மு.க.வின் பராமரிப்பில் இருந்து வருகிறது. அங்கு மின் இணைப்பை தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் பெயரில் பெற்று உள்ளனர். மின்வாரியத்தின் கவனக்குறைவால்தான் என் கணவர் இறந்துவிட்டார். எனவே என் கணவர் இறப்புக்கு உரிய இழப்பீடு கேட்டு மின்வாரியம், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சியிடம் முறையிட்டோம். ஆனால் இழப்பீடு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் கணவர் இறப்புக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

யார் பொறுப்பு

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரரின் கணவர் மின்சாரம் தாக்கி இறந்ததற்கு இழப்பீட்டை யாரிடம் இருந்து பெறுவது? இதற்கு யார் பொறுப்பு? என்பது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு, இந்த வழக்கை வருகிற 8-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

Next Story