மாவட்டத்தில் இடைவிடாமல் பெய்த சாரல் மழை: கடும் குளிரால் இயல்பு வாழ்க்ைக பாதிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை


மாவட்டத்தில் இடைவிடாமல் பெய்த சாரல் மழை:  கடும் குளிரால் இயல்பு வாழ்க்ைக பாதிப்பு:  பள்ளிகளுக்கு விடுமுறை
x
தினத்தந்தி 9 Dec 2022 6:45 PM GMT (Updated: 9 Dec 2022 6:45 PM GMT)

தேனி மாவட்டத்தில் இடைவிடாமல் பெய்த சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்ைக பாதிக்கப்பட்டது. மேலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

தேனி


சாரல் மழை

'மாண்டஸ்' புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் நேற்று மழை பெய்தது. தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் சாரல் மழை பெய்யத் தொடங்கியது. மாவட்டத்தில் பல இடங்களிலும் இரவில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது.

போடி, தேனி, ஆண்டிப்பட்டி, கடமலைக்குண்டு, சின்னமனூர் உள்பட பல இடங்களில் நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து காலை 7 மணி வரை இடைவிடாது சாரல் மழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளித்து கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார்.

குளிரும், மழையும்

தொடர்ந்து பகலிலும் சாரல் மழை பெய்தது. அதே நேரத்தில் கடுமையான குளிரும் இருந்தது. குளிரும், மழையும் சேர்ந்தே இருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பகல் முழுவதும் மழை சாரல் விழுந்து கொண்டே இருந்ததால் சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.

பால் வினியோகம் செய்பவர்கள், அன்றாடம் பணிக்கு சென்றவர்கள் மழைக்கான ஆடைகள் அணிந்து கொண்டு சென்றனர். சிலர் பிளாஸ்டிக் பைகளை தலையில் தொப்பி போல் அணிந்தபடி நடந்து சென்றனர். மாலையில் மீண்டும் சாரல் மழை பெய்தது. இதனால், பெரும்பாலான மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.

கூடலூர்

கூடலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் அதிகாலையில் குளிர்ந்த காற்றுடன் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக விவசாயிகள் விளைநிலங்களுக்கு சென்று களை பறித்தல், மருந்து தெளித்தல் பணிகள் சரிவர செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு (மில்லிமீட்டரில்) வருமாறு:- பெரியாறு 2, தேக்கடி 2.4, கூடலூர் 3.4, சண்முகா நதி 2.8, உத்தமபாளையம் 1.2, போடி 6.4, வைகை 0.8, சோத்துப்பாறை 16, பெரியகுளம் 5, வீரபாண்டி 3, அரண்மனைபுதூர் 1.4, ஆண்டிப்பட்டி 1.6.


Related Tags :
Next Story