விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை


விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை
x
தினத்தந்தி 11 Oct 2023 6:45 PM GMT (Updated: 11 Oct 2023 6:45 PM GMT)

விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

ராமநாதபுரம்

தமிழக அரசின் வேளாண்மை துறையின் சார்பில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளை வங்கி போல சேமித்து பராமரித்து வரும் விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் பயன்பெற விவசாயிகள் அக்ரிஸ்நெட் வலைதளம் அல்லது உழவன் செயலியில் விண்ணப்பிக்க வேண்டும். குறைந்தபட்சம் 100 பாரம்பரிய நெல் ரகங்களை பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பராமரித்து வரும் பாரம்பரிய நெல் ரகங்களை மறு உற்பத்தி செய்து இனத் தூய்மையுடனும், இயற்கையான முறையில் மரபு சார் நெல் ரகங்களை உற்பத்தி செய்தும் பராமரிக்க வேண்டும். விதை வங்கியில் பராமரிக்கப்படும் பாரம்பரிய நெல் ரகங்கள் நல்ல முளைப்புத்திறனுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கலெக்டர் தலைமையிலான தேர்வுக்குழு மூலம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு மாநில தேர்வு குழுவிற்கு பரிந்துரை செய்யப்படும். விண்ணப்ப படிவங்களை வேளாண்மை உதவி இயக்குனரை அணுகி பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.


Next Story